Google Play store [file image]
இந்திய பயனர்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட 17 ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இந்த 17 ஆஃப்களும் கடன் வழங்கும் (லோன் அப்ளிகேஷன்) பயன்பாடுகளாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்பைலோன்’ (SpyLoan) என்று அழைக்கின்றனர்.
இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும்.
அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் மொபைலில் இருக்கும் எஸ்எம்எஸ், புகைப்படங்கள் மற்றும் ப்ரொவ்சிங் ஹிஸ்டரி உட்பட பலதரப்பட்ட தகவல்களைத் திருடிவிடும். அதுமட்டுமல்லாமல் இது லோன் வாங்கும் ஆஃப் என்பதால் நீங்கள் கடன் வாங்குவீர்கள்.
நீங்கள் அந்த பணத்தைத் தர தாமதமானால், நீங்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டித் தொகையுடன் சேர்த்து பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உங்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டல் விடுக்கவும் இந்த ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கூகுளின் ஆப் டிஃபென்ஸ் கூட்டணியின் (Google App Defense Alliance) ஒரு பகுதியாக இருக்கும் இஎஸ்இடி (ESET) என்கிற சாப்ட்வேர் நிறுவனம் அளித்தத் தகவலின் படி, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், மெக்சிகோ, இந்தோனேசியா, கொலம்பியா, எகிப்து, கென்யா, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இந்த ஆப்ஸ் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தப் பயன்பாடுகளை டவுன்லோட் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டில் பயனர்களைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 200 க்கும் மேற்பட்ட ஸ்பைலோன் பயன்பாடுகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் பல இணையதளங்களில் இன்னமும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய முடியும். எனவே பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் இஎஸ்இடி நிறுவனம் கூறியுள்ளது.
AA Kredit, Amor Cash, Guayaba Cash, Easy Credit, Cashwow, CrediBus, FlashLoan, Préstamos Crédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera Grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash ஆகிய 17 ஸ்பைலோன் ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…