வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட்நியூஸ்..! அறிமுகமானது அட்டகாசமான வாட்ஸ்அப் சாட் லாக்..!
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் பயன்படுத்தி லாக் செய்ய முடியும்.
இதனால் லாக் செய்யப்படும் உரையாடல்கள் தனியாக குறிப்பிடப்படுவதோடு நோட்டிபிகேஷனில் லாக் செய்யப்பட்ட பெயரையும் அதில் வந்திருக்கும் செய்தியையும் வெளிப்படையாக காண்பிப்பதில்லை.
மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பயோமெட்ரிக்ஸ் அல்லது கடவுச்சொல் பயன்படுத்தி முழு வாட்ஸ்அப்பையும் லாக் செய்யும் அம்சம் இருந்தாலும், இந்த புதிய அம்சம் குறிப்பிட்ட தனிப்பட்ட செய்திகளை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் போனை யாராவது பார்த்தாலும் லாக் செய்யப்பட்ட செய்திகள் ரகசியமாகவே இருக்கும்.