தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க, AI இன் காட்பாதர்’ கூகுளிலிருந்து ராஜினாமா.!
செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன், தொழில்நுட்பத்தின் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் இருந்து விலகியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான அடித்தளத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஜெஃப்ரி ஹிண்டன், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் இந்தத் துறையில் செய்யப்பட்ட முன்னேற்றங்கள், சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் பெரிய அபாயங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
மேலும் இதன் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் தனது வேலையை விட்டுவிட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையேயான போட்டி காரணமாக அசுர வேகத்தில், புதிய AI தொழில்நுட்பங்களை வெளியிட இந்த போட்டி நிறுவனங்களைத் தூண்டுகிறது, மற்றும் தவறான தகவல்களைப் பரப்புகிறது என்று ஹிண்டன் கூறினார்.
AI ஆல் உருவாக்கப்பட்ட தவறான தகவல் பரவலைப் பற்றி எச்சரித்த விஞ்ஞானி, சராசரி நபர் “இனி உண்மை என்ன என்பதை அறிய முடியாது” என்று அவர் மேலும் கூறினார். மனிதர்களுக்கு ஆதரவாக AI பயன்படுத்தப்பட்டாலும், ChatGPT போன்ற சாட்பாட்களின் வேகமான விரிவாக்கம், மனித வேலைகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் ஹிண்டன் தனது ராஜினாமாவை, கூகுளுக்கு அறிவித்ததாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.