இந்திய பிரதர் மோடியின் சென்னை வருகையின் விளைவாக உருவான #GoBackModi எனும் ஹேஷ்டேக்கை, உலகளாவிய டிரெண்டிங் பட்டியலின் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல, என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்த நம்மில் பலருக்கு, ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது. அது டிரெண்ட் ஆவதற்கு பின்னனியில் உள்ள ட்வீட்டர் அல்காரிதம் என்ன.? என்பதை பற்றிய புரிதல், சரியாக தெரியவில்லை என்று கூற வேண்டும்.
ட்வீட்டரின் ட்ரென்டிங் அல்காரிதத்தை (டெக்கினிக்கல் தந்திரங்கள்) புரிந்து கொள்வதின் வழியாக, மிக விரிவாக ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கின் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
- ஒரு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கும் முன், மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று- உங்கள் ஹேஸ்டேக் எந்தவொரு தவறான மொழியையும் அல்லது தவறான வார்த்தைகளையும் கொண்டிருக்கக்கூடாது.
- முன் எப்போதும் பிரபலமாக உருவாகாத, பரவலாக பேசப்படாத தலைப்புகளுக்கு தான் ட்விட்டர் முன்னுரிமை வழங்கும் என்பதை உணருங்கள். அதாவது அரைத்த மாவையே அரைக்க கூடாது என்று அர்த்தம். ஒருவேளை நீண்ட கால ட்ரென்டிங் சமாச்சாரங்கள் (எடுத்துக்காட்டுக்கு ஜல்லிக்கட்டு போராட்டம்) என்றாலும் கூட, ஒரு புதிய பயனர் கூட்டத்தினால் தான் பிரபலமாக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
- புதிதாக ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாருங்கள் அல்லது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தலைப்பு தான் என்றால், வேறுபட்ட பயனர்களை அல்லது பார்வையாளர்களை இலக்காக கொள்ளுங்கள். உங்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகும் முதல் ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட ஹேஷ்டேக் உடனான 500-க்கும் மேற்பட்ட ட்வீட் உற்பத்தி செய்யப்படவேண்டும். இந்த இடத்தில ட்வீட் எண்ணிக்கை மட்டுமல்ல, ட்வீட்டிங் செய்யும் தனி நபர்களின் எண்ணிக்கையும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- ட்வீட்டர் நிறுவனத்தின் பார்வையின் கீழ், பல்வேறு (பூகோள) இடங்களில் இருந்து பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஹேஸ்டேக் ஆனது “widespread popularity” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாரிய அளவிலான கட்டத்தை அடையும் ஒரு ஹேஷ்டாக் ஆனது, ட்ரென்டிங் பட்டியலின் உச்சத்தை தொட்டுப்பார்க்காமல் போகாது.
- உங்கள் ஹேஸ்டேக்கில் 20க்கும் மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்க்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ஒரு நீண்ட ஹேஸ்டேக்கை உருவாக்கினால் அது மிக பலவீனமாதாக பார்க்கப்படும். குறிப்பாக மிக சிறிய அளவிலான எழுத்துக்களுடன் ட்வீட் செய்யும் பயனர்களை உங்கள் பெரிய ஹேஷ்டேக் ஈர்க்காது.
- இரண்டிற்கும் மேற்பட்ட முக்கிய வார்த்தைகளை கிளப்பிவிடாதீர்கள். இது உங்கள் பார்வையாளர்களை குழப்பக்கூடும். உதாரணமாக, #uniteforamericancitizen என்பதை விட #uniteforamerica என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஹேஷ்டாக் ஆக இருக்கும். ஆக மிக எளிமையாக அர்த்தத்தை உணர்த்தும் ஹேஷ்டேக்குகளை உருவாக்குங்கள்.
- நீங்கள் உருவாக்கும் ஒரு ஹேஸ்டேக் ஆனது உங்களின் பிரச்சாரத்தை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதாவது எளிமையான வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால் – அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். மேலும் கேட்பதற்க்கும், வாசிப்பதற்கும் அழகாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக எல்லா ஹேஷ்டேக்குகளும் டிரெண்ட் ஆகி விடாதது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.