தகவல் திருட்டை தடுக்க புதிய வடிவில் ஜிமெயில் :- கூகிள் நிறுவனம்..!

Default Image
கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை பாதுகாப்பு கருதி பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஜிமெயில் டிசைனையுமே மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது.

டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் வழியாக, கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பட்ட ஒரு மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷார்ட் வெளியாகியுள்ளது. அது ஜிமெயிலின் புதிய டிசைன் மற்றும் “Early Adoption Program” (EAP) பற்றிய தகவல்களை வழங்குகிறது. Early Adoption Program என்பது பொது அறிவிப்புக்கு முன்னர், சில தனிப்பட்ட பயனர்களுக்கு அனுக கிடைக்கும் ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம்.

புதிய ஜிமெயில் டிசைன் மற்றும் அம்சங்கள்.!

வெளியான ஸ்க்ரீன் ஷார்ட், ஜிமெயிலின் புதிய டிசைன், எளிய ஆப்ஸ், ஸ்மார்ட் ரிப்ளை, ஸ்னூஸ் செய்யும் விருப்பம் மற்றும் ஆப்லைன் சப்போர்ட் போன்ற அம்சங்களை காட்சிப்படுத்துகிறது. இந்த புதிய ஜிமெயில் டிசைன் மற்றும் அம்சங்களானது, அதன் வெப் வெர்ஷனில், வருகிற ஜூன் 2018-ல் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக வெளியான மற்றொரு அறிக்கையானது, டெக் க்ரஞ்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புதிய மாற்றங்களை இன்னும் கூடுதல் விவரத்தோடு காட்டுகிறது. அது ஜிமெயில் ஆப்பின் புதிய இன்டர்பேஸ், புதிய ஐகான்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற இமெயிலின் கீழே இடம் பெற்றுள்ள ஆட்டோ ரிப்ளை விருப்பம், மேல் வலது பகுதியில் உள்ள கூகுள் கீப், கேலண்டர், ஜிமெயில் டாஸ்க்ஸ் போன்ற பல அம்சங்களை வெளிப்படுத்தி உள்ளது.

எல்லாவற்றிக்கும் மேலாக, கூகுள் நிறுவனம் அதன் ஜிமெயிலில் வேறுபட்ட லே-அவுட்களை தேர்வு செய்யும் ஒரு விருப்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதாவது “டீபால்ட், “கம்போர்ட்டபில்” மற்றும் “காம்பாக்ட்” என மொத்தம் மூன்று லே-அவுட்கள் இடம்பெறும். அறிக்கை படி, டீபால்ட் லே-அவுட் ஆனது கிடைக்கப்பெற்றுள்ள ஒரு இமெயிலில் உள்ளே அட்டாச் செய்யப்பட்டுள்ள ஃபைலின் வகை என்ன என்பதை இன்பாக்ஸிலேயே காண்பிக்கும். 

கம்போர்ட்டபில் லே-அவுட்டை பொறுத்தவரை, கிடைக்கப்பெற்ற இமெயில் உள்ள அட்டாச்சமெண்டை, ஒரு பேப்பர் கிளிப் ஐகான் வடிவில் காட்டும். இறுதியாக உள்ள காம்பாக்ட் லே-அவுட் விருப்பமானது, கம்போர்ட்டபில் லே-அவுட்டை ஒத்திருக்கிறது, ஆனால் இமெயிலின் செங்குத்தான வெற்றிடத்தை குறைத்து காட்டும்.

வரும் மாதங்களில் பீட்டா வெர்ஷனில்.?

இந்த மாற்றங்கள் ஜிமெயில் ஆப்பில் எப்போது வெளியாகும் என்பது பற்றி எந்த உறுதிபடும் இல்லை. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை நோக்கத்தின் கீழ், வரும் மாதங்களில் பீட்டா வெர்ஷனில்  எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்