ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அப்டேட் ..!
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது.
ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும்.
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் — ஜெனரல் செட்டிங்ஸ் — ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.