மைக்ரோசாப்ட்டிற்கு ஆட்டம் காட்டிய க்ரவுட் ஸ்ட்ரைக்.!  கரணம் என்ன.? 

Microsoft Error - CrowdStrike

மைக்ரோசாப்ட்: உலகளாவிய மைக்ரோசாப்ட் பிரச்சனைக்கு க்ரவுட் ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு தளத்தின் அப்டேட் தான் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மணிநேரங்களாக உலகளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாது பெரும்பாலான துறைகளில் அதிக பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளம் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்த்தும் பெரும்பாலான பயனர்களுக்கு ” ப்ளூ ஸ்க்ரீன் ஆப் எரர்” எனும் நீல நிற திரை வெளிப்பட்டு கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யும்படி கோருகிறது. இதனால், பயனர்கள் தங்கள் கணினியை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மைக்ரோசாப்டில் ஏற்பட்ட இந்த நீலநிற திரை பிரச்சனை காரணமாக அதிகளவில் நேரடியாக பாதிக்கப்பட்டது விமான சேவைத்துறை தான். உலக அளவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. அதே போல, ஐடி துறை, வங்கித்துறை, மருத்துவத்துறை என மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்தும் பெரும்பாலான துறைகள் பெரியளவில் பாதிக்கப்ட்டுள்ளன.

இதற்கு என்ன காரணம் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளிப்படையாக எதனையும் கூறவில்லை. ஆனால், மைக்ரோசாட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சனை குறித்து , மத்திய அரசின் கணினி அவசரநிலை குழுவானCERT-IN வெளிப்படுத்திய தகவலில் , சைபர் செக்கியூரிட்டி தளமான க்ரவுட் ஸ்ட்ரைக் பால்கனால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

க்ரவுட் ஸ்ட்ரைக் பால்கன் (CrowdStrike) என்பது K7, கேஸ்பெர்ஸ்கி, ஆவாஸ்ட் போல ஒரு இணையப் பாதுகாப்பு  (சைபர் செக்கியூரிட்டி) தளமாகும். இந்த மைக்ரோசாப்ட் தள இடையூருக்கு மைக்ரோசாப்ட்  தளம் பிரச்சனை இல்லை என்றும், மேற்கண்ட பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் க்ரவுட் ஸ்ட்ரைக் பால்கன் இணைய பாதுகாப்பு தளம் அமெரிக்க நேரப்படி இன்று காலை மேற்க்கொண்ட அப்டேட் தான் காரணமாக அமைந்தள்ளது என கூறப்படுகிறது.

இன்று புதுப்பிக்கப்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பால்கன் புதிய வெர்சன் தற்போதுள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் இணைந்து செயல்படுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே மைக்ரோசாப்ட் தளத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த க்ரவுட் ஸ்ட்ரைக் பால்கன் பெரு நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதால், இதனை பயன்படுத்தாத சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்