ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஜியோ! ஜியோவிற்கு அடித்த ஜாக்பாட்!
இன்றைய நாகரீகமான உலகில், அலைபேசி இல்லாமல் ஒருவரை பார்ப்பது ன்பது மிகவும் கடினமான விஷயம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பதாக துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மக்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, செல்போன் சேவை துறையில், இது மூன்றாம் இடத்திலும், ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும் இருந்தது.
இந்நிலையில், ஜியோவிற்கு தற்போது, 30 கோடியே 6 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்டெல் நிறுவனத்திற்கு, 28 கோடியே 4 லட்சம் வாடிக்கையாளர்களே உள்ளனர். இதனையடுத்து, இரண்டாம் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஜியோ நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
. .