இனவெறியை தூண்டியதாக சர்ச்சை! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர்

Gemini AI: கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவான ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் கருவியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கவிருக்கிறது. தற்காலிக இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

Read More – வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G!

கூகுள் DeepMind தலைமை நிர்வாக அதிகாரி Demis Hassabis, ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தற்காலிக இடைநீக்கத்திற்கு வழிவகுத்த தவறுகளை சரி செய்த பின்னர் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் உள்ள பயனர்களால் அதில் உள்ள பிழைகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அதை சரி செய்யும் நடவடிக்கையில் கூகுள் தீவிரமாக இறங்கியது.

Read More – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை

முன்னதாக, ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பூதகரமாக மாறியது. இதன் மூலம் இந்த தொழில்நுட்பம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறது என்ற சர்ச்சையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன.

Read More – பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

அப்போது கூகுள் நிறுவனம் சார்பில், “ஜெமினி சாட்பாட், வரலாற்று துருப்புகளை தவறாக சித்தரித்ததை நாங்கள் அறிவோம். அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம் என கூறப்பட்டது. மேலும், ஜெமினி AI பிரதமர் மோடி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறியிருந்த நிலையில் அதற்கும் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்