Gallery go: இனி உங்கள் புகைப்படங்களை கூகுளே பிரித்து கொடுக்கும் புதிய செயலி அறிமுகம்
இந்த அண்டத்தை படைத்தது கடவுள் என்று பலர் கூறலாம் ஆனால் இப்பொழுது இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கூகுள் .
ஆன்ட்ராய்டு உலகை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது முதல் கூகுள் தனது பயனர்களுக்கு புது புது சேவைகளை தனது செயலிகள் மூலம் வழங்கிவருகிறது.இப்பொழுது கூகுளை Gallery go என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது .
இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றவால் பயனர்கள் இணைய சேவை இல்லாமல் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.நீங்கள் கேட்கலாம் நான் ஏற்கனவே இது போன்ற பல செயலிகள் உபையோக படுத்துகிறேன் ஆனால் இந்த செயலி செயற்க்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது . இதன் மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை அதன் என்ன புகைப்படம் அது செல்ஃபி ,உணவு ,மிருகங்கள் ,இடங்கள் என தனித்தனியாக சேமித்து வைக்கும்.அது மட்டுமில்லை இணையம் இல்லாமல் உங்கள் புகைப்படத்தை எடிட் செய்யும் வசதியையும் கொண்டுவந்துள்ளது .
இது ஒரு லைட் வெயிட் செயலி என்பதால் இது வேகமாக இயங்கும். இது கூகுள் போட்டோஸ் க்கு பதிலாக களத்தில் இறங்கியுள்ளது .இதன் அளவு 10mb குறைவாகவே உள்ளது .