Galaxy Z Flip 5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமாகும் சாம்சங்கின் ஃபிளிப் 5.! விலை எவ்வளவு தெரியுமா..?
கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் நிறுவனம், அதன் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது.
இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5-ஐ புதிய நிறத்தில் சாம்சங் வெளியிடவுள்ளது. அதன்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.
அறிமுகம்
இதனை உறுதி செய்து சாம்சங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியீட்டுத் தேதியை டீஸருடன் பகிர்ந்துள்ளது. அதன்படி, மஞ்சள் நிற இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒரு பகுதி மஞ்சள் நிறத்திலும், மற்றொரு பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். இந்த மாடல் ஏற்கனவே மலேசியாவில் வெளியாகி விற்பனையாகி வருகிறது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது 2640 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள (17.03 செ.மீ) எஃப்எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 x 748 ரெசல்யூஷன் கொண்ட 3.4 (8.61 செ.மீ) இன்ச் அளவுள்ள சூப்பர் அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இதில் 1,600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளது.
பிராசஸர்
அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கக்கூடிய ஒன் யுஐ 5 உள்ளது. கைரோஸ்கோப் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமரா
இதன் பின்புறத்தில் 12 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு செல்ஃபிக்காக 10 எம்பி கேமரா உள்ளது. பிக்ஸ்பி விஷன், பனோரமா, ஹைப்பர்லேப்ஸ், போர்ட்ரெய்ட், போர்ட்ரெய்ட் வீடியோ, புரோ, புரோ வீடியோ, சிங்கிள் டேக், ஸ்லோ மோஷன், சூப்பர் ஸ்லோ-மோ என பல அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
187 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 3,700 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த வசதி மூலம் பேட்டரியை 30 முதல் 45 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மற்றும் 512 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. இதில் 256 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் ரூ.99,999 என்ற விலையிலும், 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,09,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதனை சாம்சங் ஸ்டோர் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் வாங்கிகொள்ளல்லாம். இந்த புதிய நிறத்துடன் வரும் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.