Galaxy A05s: இந்தியாவில் களமிறங்கும் சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.! எப்போ அறிமுகம் தெரியுமா.?

Galaxy A05s

சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பிலிப்பைன்ஸிலும் அறிமுகமாகியுள்ளது.

இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, தற்போது சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ05எஸ் ஆனது அக்டோபர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் (170.8 மிமீ) அளவுள்ள எஃப்எச்டி+ பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

பிராசஸர்

194 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 610 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 4ஜி பிராசஸர் ஆகும். இதில் ஓரளவு நல்ல கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடலாம். அதோடு ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது ஸ்மூத்தாக இருக்கும். இதில் ஆன்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யூஐ 5.1 உள்ளது.

கேமரா:

கேலக்ஸி ஏ05எஸ் பின்பிறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆக்சிலரோமீட்டர், லைட், ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்கள் உள்ளது.

பேட்டரி

இதில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் அதிக நேரம் பயன்படுத்த முடியும். இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்டோரேஜ் 

லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் மற்றும் லாவெண்டர் பிங்க் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் உள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்த முடியும்.

விலை

விலையைப் பொறுத்தவரையில் கேலக்ஸி ஏ05எஸ் இன் ஆனது ரூ.15,000 க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் 6 ஜிபி வேரியண்ட் RM 799.00 (ரூ.14,098) என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்