நியூ மொபைல் அப்டேட்ஸ் முதல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் வரை… இன்றைய டெக்னாலஜி செய்திகள்.!
சென்னை : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட் அறிமுகம் தேதி முதல், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் வரையிலான டெக்னாலஜி அப்டேட்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
OnePlus பட்ஸ் ப்ரோ 3 :
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் (OnePlus பட்ஸ் ப்ரோ 3) நாளை (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) 06.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் ஆகும், இது பட்ஸ் ப்ரோ 2 க்கு அடுத்ததாக வரவுள்ள இந்த இயர்பட், 10 நிமிட சார்ஜ் 10 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது. ANC மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற கூடுதல் வசதிகளுடன் கூடிய பிரீமியம் ஆடியோ அனுபவத்தைத் தேடும் பயனர்களுக்கு இது ஒரு தேர்வாக இருக்கும்.
போகோ Pad 5G :
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ, Poco Pad 5G இந்தியாவில் ஆகஸ்ட் 23 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் விலை ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் போகோவின் முதல் டேப்லெட் இதுவாகும்.
ஜியோ நியூ ப்ரீபெய்ட் பிளான் :
ஜியோ பயனர்கள் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, தினசரி வரம்பு 2.5 ஜிபி. இதில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பண்ண முடியும். அது மட்டும் இல்லாமல், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற இலவச OTT சேவைகளும் கிடைக்கிறது. அதிகமான டேட்டா தேவைப்படும் மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் சதியை விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
பிஎஸ்என்எல் சூப்பர் பிளான் :
BSNL -ன் புதிய திட்டத்தின் படி, ரூ.666 ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2ஜிபி 4ஜி டேட்டாவுடன் வருகிறது. மொத்தம் 105 நாட்களுக்கு 210ஜிபி வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா முடித்துவிட்டால், டேட்டா வேகம் 40kbps ஆகக் குறையும். மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த பிளான் குறிப்பாக மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ்அப் புதிய அப்டேட் :
ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் Giphy உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது தாங்களாகவே புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கவும் முடியும். பயனர்கள் வெளிப்படுத்த விரும்பும் ஸ்டிக்கரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மெட்டாAI-ஐப் பயன்படுத்தி ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தைப் பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சம் தற்போது அமெரிக்காவில் உள்ள Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது.