இலவசமா ப்ரோகிராமிங் கற்று தருகிறது கூகுள்..!!
கூகிள் நிறுவனம், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச மொபைல் அப்ளிகேஷனான கிராஸ்ஹோப்பரை அறிமுகம் செய்துள்ளது.
இது மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் ஃபோனில் நம்பிக்கையோடு பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது. சில எளிய சவால்களைத் தீர்ப்பது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் ஜாவாஸ்கிரீப்ட்டின்அடிப்படை காரியங்களை நீங்கள் விரைவில் கற்று கொள்ள முடிகிறது.
விளையாட்டுத்தனமான முறையில் அமைந்த இந்த அப்ளிகேஷனுக்கு, ப்ரோகிராமிங்கில் முன்னணி வகிக்கும் கிராஸ்ஹோப்பர் என்ற பெயரை தழுவி பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இதில் கோடிங்கின் அடிப்படைகள் (காலிங் செயல்பாடுகள், நிலையற்றவைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் பல) தவிர அனிமேஷன் கூட உட்படுத்திய மூன்று பாடத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு, ஒரு சில சவால்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ள வைக்கிறது இந்த அப்ளிகேஷன். கிராஸ்ஹோப்பர் அப்ளிகேஷனில் உள்ள உள்ளடக்கங்களை முடித்த பிறகு, உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதன் மூலம் ஜாவாஸ்கிரீட், ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், அல்கோரிதம்ஸ் மற்றும் கட்டணத்தோடு கூடிய இணையதள வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடுதலாக கற்று கொள்ளலாம். இல்லாவிட்டால், கிராஸ்ஹோப்பரின் ஆன்லைன் ஆடுகளத்திலேயே இருந்து, நீங்களே சொந்தமாக ஜெஎஸ் அனிமேஷன்களைச் செய்து கொள்ளலாம். இயல்பாகவே, கோடுகளைக் குறித்து கற்று கொள்ள வேறு மாற்றுகளையும் நீங்கள் அணுகலாம். இடிஎக்ஸ் மற்றும் ஃப்ரீகோடுகேம்ப் உள்ளிட்டவை இது போன்ற வகுப்புகளை அளிக்கின்றன.
நான் மேனிலைப் பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற போது, நான் கற்றிருந்த கோடிங் குறித்த எளிய காரியங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர இது உதவியது. நீங்கள் ஒரு வழக்கமான பயணத்தில் இருக்கும் போது கூட, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேடிக்கையாகவும், இதில் உள்ள சில சவால்களைப் வெற்றிப் பெறுவது மிக எளிதாகவும் உள்ளது. சமூக இணையதளங்களில் வரும் இடுகைகளைப் பார்த்து உருட்டி கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும் நிலையில், இது ஒரு சிறந்த மாற்றாக உங்களுக்கு அமைகிறது.
ஏரியா 120 குழுவினரிடம் இருந்து வெளியான நவீன தயாரிப்பான கிராஸ்ஹோப்பர் மூலம் கூகுள் பணியாளர்களுக்கு தங்களின் பகுதிநேர ப்ராஜெட்களில் முழுநேரமாக பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதோடு, அவற்றை பயன்பாட்டிற்குள் கொண்டு வர முடிகிறது.
முன்னதாக, உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து யூடியூப் வீடியோக்களைப் பார்க்க உதவும் அப்டைம் மற்றும் இமோஜி விரும்பிகளுக்கான ஒரு மெசேஜ்ஜிங் அப்ளிகேஷனான சூப்பர்சோனிக் ஆகியவற்றின் அறிமுகங்களில் இது போன்ற நிலை காணப்பட்டது. கூகுள் ப்ளே அல்லது அப் ஸ்டோரில் இருந்து கிராஸ்ஹோப்பர் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.