பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள தயார் என்று தெரிவித்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் அம்சங்களை, மாற்றியமைத்து தற்போதைய பி.ஜே.பி. அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்த பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. போர் விமான தயாரிப்பில் தங்களுக்கும் போட்டியாளர்கள் இருப்பதால், அதுகுறித்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்ள இயலாது என்றார். இருப்பினும், இதுகுறித்த சர்ச்சை எழுந்திருப்பதால், இந்திய அரசு விரும்பினால், ரஃபேல் போர் விமான ஒப்பந்த தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ள தயார் என்றார்.