போர்ட்நைட் கேம்(fortnite game) இப்போது உங்கள் ஸ்மார்ட்போனிலும்..!
போர்ட்நைட் கேம்(fortnite game) தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கேமாக இருக்கிறது மற்றும் எப்போதும் இருக்கப் போகிறது. போர்ட்நைட் மொபைல் கேம் ஆண்ராய்டிலும் வரப்போகிறது. உலகம் முழுவதும் 10மில்லியன் பேர் இதை விளையாடுகின்றனர் மற்றும் அனைத்து கேமிங் தளங்களிலும் இது விரிவதை பார்க்கும் போது, இன்னும் அதீத வளர்ச்சியடையவுள்ளது.
இந்த கேமில் 100 ஆயுதமில்லா வீரர்கள் வரை ஒன்றுசேர்த்து, ஏதாவது ஒரு ஆயுதத்துடன் மேப் மீது விடப்படுவர். அங்கிருந்து பாழடைந்த கட்டிடங்களை தேடி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்களுக்கான உறைவிடம் மற்றும் கோபுரங்களை கட்ட வேண்டும்.
இவையனைத்தையும் அடிக்கும் சுழல் காற்றிற்கு இடையே செய்யவேண்டும். இதுபோலவே மேப்பின் ஒவ்வொரு பகுதியாக செல்ல வேண்டும். இந்த கேமில் விளையாடுபவரின் குறிக்கோளே “உயிரோடு இருக்க வேண்டும், அதற்காக பிறரை கொல்ல வேண்டும்”.
போர்ட்நைட் கேம் இலவசமாக விளையாடலாம். மேலும் இதை விளையாட விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட வெர்சன்களும் உள்ளன. சேவ் தி வோர்ல்டு மற்றும் ப்ளேயர் அன்னோன் பேட்டில்கிரவுண்ட் . இந்த கேம் பிரபலமடைய இன்னொரு காரணம் இதை லைவ் ஸ்ட்ரீம் செய்யும் டிவிச்(Twitch) என்னும் தளம். இந்த தளத்தின் மூலம் இந்த கேம் பிரபலமடைந்து தினமும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடுகின்றனர்.
மற்ற மல்டி ப்ளேயர் கேமை போலவே இதுவும் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் இதில் விளையாடுபவர் வாங்கும் காஸ்மடிக் பொருட்கள், எமோடிஸ், டேன்ஸ் மூவ்ஸ் மற்றும் சைகைகள் போன்றவற்றை வாங்கும் போது அவர்களுக்கு பணம் கிடைக்கிறது.
உலகிலேயே ஆண்ட்ராய்டு தான் மிகப்பெரிய கேமிங் தளம். விரைவில் இதில் போர்ட்நைட் கேமை வெளியிட திட்டமிட்டுள்ளதாக எபிக் கேம்ஸ் கூறியுள்ளது. ஆனால் ஐ ஓ.எஸ் ல் ஏற்கனவே இந்த கேம் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ராய்டு வெளியிடும் போது பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
இதில் விளையாடுபவர்களுக்கு தெரியும் இந்த கேம் தற்போது நிலையாக இல்லை என்று. நிறைய தவறுகள் உள்ளன. அதே சமயம் சர்வரும் செயலிழந்து விடுகிறது. எனவே ஆண்ராய்டில் இதை வெளியிடுவது கடினமே. ஆனாலும் ஐ ஓ.எஸ் ல் இந்த கேம் வெற்றிக்கொடி நாட்டிவிட்டது.ஐ ஓ.எஸ் பயனர்களிடமிருந்து மட்டும் தினமும் 2 மில்லியன் டாலர் பணம் சம்பாதிக்கிறது. சேல் தி வேர்ல்டு வெர்சன் அதிக மெமரி மற்றும் சி.பி.யூ திறனை எடுத்துக்கொள்வதால் அதை மொபைலில் கொண்டு வருவது மிகவும் கடினம் என்கிறது எபிக் கேம்ஸ் நிறுவனம்.
மாரச் மாத துவக்கத்தில் எபிக் கேம்ஸ் நிறுவனம் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் போர்ட்நைட் ஆண்ட்ராய்டில் வெளியாகும் என கூறியிருந்தது. அப்படியென்றால் மே அல்லது ஜூன் ஜூலை மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.