பேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பிலும் திருட்டா..??
இந்தியாவில் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான மெசேஜ் தளமான வாட்ஸ்ஆப், “பாதுகாப்பானது இல்லை” என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் வாட்ஸ்ஆப்பின் யூசர் அக்ரிமெண்ட் (பயனர் உடன்படிக்கை) நிபந்தனைகளின் மீது சில கேள்விகளும், பல சந்தேகங்களும் எழுந்தன. இவ்வண்ணம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் பயனர் பாதுகாப்பு சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியது. தற்போது தன் மீது கூறப்பட குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமும், பதிலும் அளித்துள்ளது.
பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற குற்றசாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், பரிமாறப்படும் மெசேஜ்களில் இருந்து “சிறிய அளவிலான” தகவல்கள் மட்டுமே சேகரிகப்படுகிறது என்பதை ஒற்றுக்கொண்டுள்ளது.
சிறிய அளவிலான தரவுகள் சேகரிக்கப்பட்டாலும் கூட அனைத்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களுமே எண்ட்-டூ- எண்ட் என்க்ரிப்டட் தான் (குறியாக்கம் செய்யப்பட்டவைகள் தான்) என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சமீப காலமாக ஊடங்களில் வெளியான கருத்துகளுக்கு முரணாக, “வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தொடர்ச்சியாக கண்காணிகிறது என்பது பொய்” என்று ஒரு வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
“எங்கள் பயனர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகமிக முக்கியமான விஷயமாகும். இன்வைட் லின்க்ஸ் (Invite links) கூட க்ரூப் அட்மின்களுக்கான ஒரு ஆப்ஷனல் அம்சம் தான்” என்றும் வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
நமது தனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள் போன்ற தகவல்களை பேஸ்புக் உடன், வாட்ஸ்ஆப் பகிர்ந்து கொள்கிறது, இதை வாட்ஸ்ஆப் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது.