Foldable iPad: தீவிர வளர்ச்சியில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட்.! விரைவில் அதிரடி அறிமுகம்..!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக்புக், ஐபாட் மற்றும் ஏர் டேக் என பல புதிய புதிய சாதனங்களை தயாரித்து, அறிமுகப்படுத்தி வருகிறது. தற்பொழுது ஃபோல்டபிள் மாடல் என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிள் ஃபோல்டபிள் தயாரிப்புகளில் வேலை செய்து வருகிறது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் தான் தயாரிக்கும் ஐபேடை ஃபோல்டிங் மாடலாக (Foldable iPad) வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஃபோல்டிங் ஐபேடின் சிறிய அளவிலான உற்பத்தியை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கலாம். இதையடுத்து, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஐபேடை அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த ஜூலை மாதம் பேட்டன்ட்லி ஆப்பிள் ஆனது ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2026 ஆம் ஆண்டிற்கான ஹைப்ரிட் ஐபேட்-நோட்புக் சாதனத்திற்காக கொரிய டிஸ்ப்ளே மேக்கர்களுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி, ‘ஓரியான்’ எனப்படும் ஆப்பிளின் எம்3 சிப்புடன் விண்டோஸ் 12 ஓஎஸ் உடன் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஃபோல்டபிள் ஐபேடின் வடிவமைப்பை நிறுவனம் இன்னும் இறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது.
இதனையடுத்து ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் கசியத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, 16 சீரிஸில் பயன்படுத்தப்படக் கூடிய சிப்செட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்தவருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஐபோன் 16 சீரிஸில் உள்ள பேசிக் மாடல்களுக்கு பழைய ஏ16, ஏ17 பயோனிக் சிப் பயன்படுத்தப்படாது எனக் கூறப்படுகிறது.
ஐபோன் 16 சீரிஸ் ஆனது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 அல்ட்ரா என நான்கு மாடல்களில் வரலாம். இதில் இருக்கும் ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் மாடல் புதிய ஏ18 பயோனிக் சிப்பைக் கொண்டிருக்கும். அதேபோல, ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ரா (ப்ரோ மேக்ஸ்) மாடலில் ஏ18 ப்ரோ சிப் பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025