இரண்டு வாரங்களுக்கு முன்பு, பேஸ்புக் வழியாக தகவல்களை சேகரிக்கும் (அல்லது திருடும்) ஆப்ஸ் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பேஸ்புக் வாக்குறுதி அளித்திருந்தது அதனை தொடர்ந்து இன்று, ஒரு பயனரின் பேஸ்புக் தகவல்களை பாதுகாக்க உதவும், சக்திவாய்ந்த பேஸ்புக் அப்டேட்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி செக்-இன்ஸ், லைக்ஸ், போஸ்ட்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஈவென்ட்ஸ் மற்றும் க்ரூப்ஸ் போன்ற தகவல்களை அணுகும் அனைத்து பயன்பாடுககளுக்கும், பேஸ்புக் ஒப்புதல் கிடைத்த பின்னரே அனுமதி திறந்து விடப்படும்.
மதம் மற்றும் அரசியல் பார்வைகள், ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் விவரங்கள், கஸ்டம் பிரென்ட் லிஸ்ட், கல்வி மற்றும் பணி வரலாறு, உடற்பயிற்சி செயல்பாடு, புத்தக வாசிப்பு செயல்பாடு, இசை கேட்கும் செயல்பாடு, செய்தி வாசிப்பு, வீடியோ போன்ற தனிப்பட்ட தகவலுக்கான அணுகல்கள் இனி வழங்கப்படமாட்டாது.
ஒரு நபரின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பேஸ்புக் தேடலில் டைப் செய்வதின் மூலமாக குறிப்பிட்ட நபரை மிக எளிமையாக கண்டுபிடிக்கும் வசதி இருந்து வருகிறது. இது ஒருவரின் முழு பெயரை அல்லது சரியான பேஸ்புக் ப்ரொபைல் பெயரை டைப் செய்யும் வேலையை குறைக்கிறது. சில நேரங்களில் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதால், தற்போது இந்த அம்சம் முடக்கப்பட்டுள்ளது.
பேஜஸ் ஏபிஐ (Pages API) என்பது எந்தவொரு பேஸ்புக் பக்கத்தையும் அணுகி, அதில் லைக்ஸ் மற்றும் கம்மெண்ட்களை பதிவிட உதவும் ஒரு அப்ளிகேஷன் இன்டர்பேஸ் புரோகிராமிங் ஆகும். இதன் வழியாகத்தான் டெவலப்பர்கள், பேஸ்புக் பேஜ் ஓனர்களுக்களுக்கும் கமெண்ட் அல்லது மெசேஜ் ரிப்ளை செய்வதற்கான டூல்களை உருவாக்குகிறார்கள். பேஜஸ் ஏபிஐ சார்ந்த அனைத்து அணுகல்களையும் பேஸ்புக் அங்கீகரிக்கும்.
க்ரூப் தற்போது வரையிலாக, க்ளோஸ்டு க்ரூப்களின் உள்ளடக்கத்தை அணுக, க்ரூப் மெம்பர்ஸ் அல்லது க்ரூப் அட்மினிடம் ஆப்ஸ்கள் அனுமதி கேட்கும். இந்த அனுமதியானது, க்ரூப்களில் எளிமையாக போஸ்ட் செய்ய அல்லது ரிப்ளை செய்ய க்ரூப் அட்மின்களுக்கு உதவுகின்றன. இருப்பினும் கூட, க்ரூப் சாட்களின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும் நோக்கத்தின்கீழ் க்ரூப் ஏபிஐ பயன்படுத்தி அனைத்து மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களும் இனி பேஸ்புக்கின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…