அதிரடி தள்ளுபடி..ஐபோன் 14 முதல் ரெட்மி 12 வரை.! Flipkart பிக் இயர் எண்ட் சேல் அசத்தல்.!

iPhone 14 - Redmi 12

இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் 2023ம் ஆண்டு நிறைவையொட்டி பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) என்கிற ஒரு பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் பிஎன்பி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இப்போது ஆப்பிள், சாம்சங், ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட்போன்களில் விலை மற்றும் சலுகைகளை பார்க்கலாம்.

iPhone 14

நமக்கு மிகவும் பிடித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ஆனது ரூ.69,900 லிருந்து 15% தள்ளுபடியில் ரூ.58,999 என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.10,901 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையை இன்னும் குறைக்க பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுகளில் ரூ.1000 வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் போனஸாக வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.42,700 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

iPhone 14 Plus

இது தவிர, ரூ.89,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் இப்போது பிளிப்கார்ட்டில் 14% தள்ளுபடியுடன் ரூ.67,999 எனும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.11,901 வரை குறைக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா மற்றும் பிஎன்பி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.42,700 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெறலாம்.

Samsung Galaxy S22 5G

இந்த கேலக்ஸி எஸ்22 5ஜி (SAMSUNG Galaxy S22 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.72,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இதே வேரியண்ட் பிளிப்கார்ட்டில் 53% தள்ளுபடியில் ரூ.39,999 என்கிற விலையில் கிடைக்கிறது. பேங்க் ஆப் பரோடா மற்றும் பிஎன்பி கார்டுகளில் ரூ.1000 வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்கள் மீது எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.36,550 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

Poco M6 Pro 5G மற்றும் Redmi 12

பட்ஜெட் போன்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் ரூ.16,999 எம்ஆர்பி கொண்ட போகோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன், இப்போது ஃபிளிப்கார்ட்டில் 29% தள்ளுபடியில் ரூ.11,999-க்கு விற்பனைக்கு உள்ளது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.5,000 குறைக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா மற்றும் பிஎன்பி கார்டுகளில் 10 சதவீதம், அதாவது ரூ.1000 வரை உடனடி தள்ளுபடியை பெறலாம். அதோடு ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் வேரியண்ட் ரூ.14,999 லிருந்து 31% தள்ளுபடியுடன் ரூ.10,999 விலையில் விற்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi