பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி!

Published by
Venu

பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து  ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.அலிபாபா, அமேசான் போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தின் விரிவாக்கத்துக்கு ரூ.4,472 கோடியும், பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனத்துக்கு ரூ.370.90 கோடியும்  திரட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான ஆவணங்களை பிளிப்கார்ட் நிறுவனம் கம்பெனி பதிவாளருக்கு அனுப்பியுள்ளது என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

அமேசான் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்குகளை பிரித்துவரும் நிலையில் அதற்கு போட்டியாக தனது தொழிலை விரிவாக்கம் செய்ய இந்த நிதியை பிளிப்கார்ட் பயன்படுத்த உள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு கட்டமாக, டென்சென்ட், இ-பே, மைக்ரோசாப்ட் மற்றும் சாப்ட் பேங்க் குழுமத்திலிருந்து 400 கோடி டாலரை பிளிப்கார்ட் திரட்டியது. அதற்கு அடுத்து தற்போது பிளிப்கார்ட் நிதி திரட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக பேசிய சாப்ட் பேங்க் குழும தலைமைச் செயல் அதிகாரி மாசயோஷி சன், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தவிர பிளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவின் முக்கிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால் மார்ட் நிறுவனத்திடமிருந்து நிதி திரட்டவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய இ-காமர்ஸ் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்று மார்கன் ஸ்டான்லி நிதிச் சேவை நிறுவனம் கணிப்பை வெளியிட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

4 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

17 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago