தூக்கத்தையும் கண்காணிக்கும் ஃபிட்பிட் வேர்ஸா(Fitbit versa) வாட்ச்..!
ஃபிட்பிட் நிறுவனம், அதன் ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இவை அடுத்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும்.
இந்தியாவில் இதன் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
24X7 இதயத் துடிப்பை கணிகாணிக்க முடியும்
வாட்ச் திரையிலேயே உடற்பயிற்சி முறைகளை காணலாம்
மாதவிடாயையும் முன்னறிவிக்கும்
தூக்கத்தையும் கண்காணிக்கலாம்
உடல் ஆரோகியம் மற்றும் உபாதைகளுக்கான தீர்வுகள் குறித்த தரவுகளை தினசரி உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலும் பெறலாம்
பாடல்களைக் கேட்கலாம்
4 நாட்களுக்கு நீடிக்கக் கூடிய பேட்டரி