இந்தியாவிலே முதன்முறையாக ஏ.சி.வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கம்!
நாட்டிலேயே முதன் முறையாக ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கப்பட்டது. சர்ச்கேட் முதல் விரார் வரை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த புறநகர் ரயில் ஏ.சி. வசதியுடன் இயக்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களுக்கு மாற்றாக 12 ஏ.சி. ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கான கட்டணம் சாதாரண ரயிலின் முதல் வகுப்பு அடிப்படைக் கட்டணத்தைவிட 1.3 மடங்கு அதிகமாகும். வாராந்திரக் கட்டணம் 285 ரூபாய் முதல் 1,070 ரூபாய் வரையிலும், மாதாந்திரக் கட்டணம் 570 ரூபாய் முதல் 2,040 ரூபாய் வரை தொலைவுக்கு ஏற்றாற்போல் வசூலிக்கப்படவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் ஏ.சி.ரயில், வார இறுதி நாட்களில் பராமரிப்புக் காரணங்களுக்காக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.சி. புறநகர் ரயில் சோதனை ஓட்டம் இன்று நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் நடத்தப்பட்டது.
source: dinasuvadu.com