123 ஸ்போர்ட்ஸ் மோட்..புளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான வாட்ச்.! ஃபயர்போல்ட் நிறுவனம் அதிரடி.!

Published by
செந்தில்குமார்

உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 240 x 280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 1.85 இன்ச் அளவில் சதுர வடிவிலான எச்டி டிஸ்பிளே உள்ளது.

மொபைல் போனிற்கு வரும் கால், மெஸேஜ் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக வாட்ச் ஸ்க்ரீனில் காணலாம். ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளேவில் சிறப்பான அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இதில் இருக்கக்கூடிய புளூடூத் காலிங் வசதி மூலம் உயர்ந்த தரத்திலான அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!

இதற்கு ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. பயணத்தின் போது இதன் மூலம் எளிதாக கால் செய்ய முடியும். இதில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.

இதனுடன் 123 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் உள்ளன. இந்த வாட்ச் இன்பில்ட் கேம்களுடன் வருகிறது. இதனால் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது இதைவைத்து பொழுதைக் களிக்கலாம். நீர் மற்றும் தூசிலிருந்து பாதுகாக்க ஐபி67 ரேடிட்ங் உள்ளது.

உங்கள் மொபைலில் நீங்கள் கேட்கும் பாடல்களை இதில் கண்ட்ரோல் செய்ய முடியும். போட்டோ எடுக்கும்போது இந்த வாட்ச்சை ஷட்டர் ஆக பயன்படுத்தலாம். பிளாக், கோல்ட், சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நான்கு வண்ணங்களில் உள்ள ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் ரூ.1,500 என்கிற விலையில், அதிகாரப்பூர்வ ஃபயர்-போல்ட் இணையதளம் மற்றும்  ஃபிளிப்கார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

Recent Posts

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

7 minutes ago

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

29 minutes ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

13 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

14 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

15 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

15 hours ago