AMOLED டிஸ்பிளே..ப்ளூடூத் காலிங்குடன் ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக்.! விலை என்ன தெரியுமா.?
கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி ஃபயர்-போல்ட் (Fire Blot), ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் (Rise Luxe) ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.1,499 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது புதிதாக ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக் (Fire-Boltt Strike) ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சதுர வடிவ டயல் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச், ஜின்க் அலாய் மிடில் பிரேமைக் கொண்ட முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 410 x 502 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 1.95 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 500 நிட்ஸ் பிரைட்னஸும் உள்ளது. இதில் உள்புறம் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் கால் பேசிக் கொள்ள முடியும். வாட்சில் இருக்கும் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2 பிளட் ஆக்ஸிஜன் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர், 123 ஸ்போர்ட்ஸ் மோட், டைமர், ரிமோட் மியூசிக் மற்றும் கேமரா கட்டுப்பாடுகள் மற்றும் பல போன்ற பல பயன்பாட்டு அம்சங்கள் உள்ளன.
50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமான லாவாவின் பட்ஜெட் மாடல்.?
நீர் மற்றும் தூசிலிருந்து பாதுகாக்க ஐபி67 ரேட்டிங் உள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், கிளாசிக் பயன்முறையில் 8 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து நிறுவனம் அதன் ரேஸிங் சீரிஸை அறிமுகப்படுத்தவுள்ளது
ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக் அம்சங்கள்
- 1.95 இன்ச் டிஸ்பிளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
- ப்ளூடூத் காலிங், AI வாய்ஸ் அசிஸ்டன்ட்
- ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் மானிட்டர்(SpO2), ஸ்லீப் மானிட்டர்
- இன்பில்டு மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்
- 123 ஸ்போர்ட்ஸ் மோட்
- கிளாசிக் பயன்முறையில் 8 நாட்கள் பேட்டரி நீட்டிப்பு.
- அலாரம் கடிகாரம், ஸ்டாப்வாட்ச், டைமர்
- ரிமோட் மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்
விலை
இந்த புதிய ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக் ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, கேமோ பிளாக், கேமோ கிரீன், கோல்ட் பிளாக் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் ரூ.1,799 என்கிற விலையில், இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனைக்கு உள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.