‘தங்க மோதிரம்லாம் தேவை இல்லை ..இனி இது போதும்’ ..! சாம்சங்கின் ‘கேலக்ஸி ரிங்’ அம்சங்கள் ..!

Published by
அகில் R

கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு :

  • சாம்சங் வெளியிட்டுள்ள இந்த மோதிரமானது டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நீரில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மோதிரம் வெறும் 2.3-3.0 கிராம் அளவிற்கு தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
  • இதனால் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

அம்சங்கள் :

  • சாம்சங்கின் ஹெல்த் ஆப்ஸுடன் (Health Option) ஆப் மூலம் இந்த மோதிரத்தை இணைப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தினமும் கவனித்துக் கொள்ளலாம். அதில் முக்கியமாக இதயத் துடிப்பை சரியாக இருக்கிறதா?, நன்றாக தூங்குகிறோமா?, பிபி (BP) போன்றவற்றை சரிபார்க்க வேண்டும் என்றால் அதை இப்போது இந்த சாம்சங் மோதிரத்தின் மூலம் செய்யலாம்.
  • மேலும் இதில் உடல் வெப்பநிலை சென்சாரும் உள்ளதால் நம் உடல் சூடானால் கூட இது நமக்கு தெரிவித்துவிடும் அந்த அளவிற்கு இதனது அம்சங்களை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
  • சாம்சங் ரிங்கில் மேலும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இதில் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது தான்.
  • இந்த AI மூலமாக தான் உடலை நம்மால் கண்காணித்து கொள்ள முடிகிறது.
  • இந்த ரிங்கால் சாம்சங் கேலக்ஸி போனையும் கட்டுப்படுத்தவும் முடிகிறது.
  • மேலும், இந்த ரிங் தொலைந்து விட்டாலோ அல்லது கண்ணுக்கு தென்படாமல் இருந்தாலோ ‘ஃபைன்ட் மை ரிங்’ எனும் ஆப்ஷன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
  • இதில் இன்னோரு அம்சம் என்னவென்றால் ஒரு முறை இதில் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு அது நீடிக்கும் திறனுடன் உருவாக்கி உள்ளனர்.

விலை விவரம் :

  • அற்புதமாக சாம்சங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரிங்கானது ரூ.5000/- முதல் சாம்சங் ஷோரூம் மற்றும் இதர சந்தைகளில் கிடைக்கிறது.
  • அதே நேரம் அதனது அம்சங்களுக்கு ஏற்ப விலை உயர்வாகவும் கிடைக்கிறது.
Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago