Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart -ல் விலை ரூ.21,999 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், Infinix Note 40 Pro+ 5G-ன் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது.
இன்று அறிமுகமாகி உள்ள இந்த போனை இன்று ஆர்டர் செய்தால், ரூ.4,999 மதிப்புள்ள MagKit ஐ இலவசமாக பெற்று கொள்ளலாம். MagKit ஆனது MagCase மற்றும் MagPower சார்ஜர் ஆகியவை கிடைக்கும். இந்த ஆஃபர் ஒரு நாள் ஆஃபராக Flipkart -ல் பிரத்தியேகமாக கிடைக்கிறது.
இரண்டு போன்களும் 20W வயர்லெஸ் MagCharge மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் உடன் கிடைக்கிறது. இதன் மூலம், ஸ்மார்ட்போனை 26 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆரம்ப விற்பனையாக Flipkart -ல் HDFC மற்றும் SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பொறுத்தவரையில், தகுதிகேற்ற மொபைல் போனை , எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ. 19,500 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…