யூபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த சாட் GPT.!
யூபிஎஸ்சி தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் GPT, 54 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் முக்கிய பணியாளர்கள் தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்விஸ் தேர்வாணையம் நடத்தும் யூபிஎஸ்சி(UPSC ) தேர்வின் முதல்நிலைத்தேர்வில் ChatGPT தோல்வியடைந்துள்ளதாக அனாலிட்டிக்ஸ் இந்தியா இதழ் கூறியுள்ளது. UPSC பிரிலிம்ஸ் 2022 இன் கேள்வித் தாள் 1 (செட் ஏ) இலிருந்து 100 கேள்விகளுக்கு பதிலளித்த சாட் சாட் GPT, 54 கேள்விகளுக்கு மட்டுமே சரியாக பதிலளித்துள்ளது.
இதன்அடிப்படையில், 87.54 கட் ஆஃப் அடிப்படையில் சாட் GPTயால் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. தற்போது உலகின் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த சாட் GPT, குறைந்த கால அளவிலேயே பிரபலமாகி விட்டது. உலகில் உள்ள அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இந்த சாட் GPT, உலகெங்கிலும் உள்ள மிகவும் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) திட்டத்தின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றது முதல் அமெரிக்க மருத்துவத் தேர்வில் வென்றது வரை, ChatGPT தனது திறமையை நிரூபித்துள்ளது. இதேபோல் முயற்சிக்கப்பட்ட யூபிஎஸ்சி தேர்வில் சாட் GPT தோல்வியடைந்துள்ளது.
நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட இந்த சாட் GPT, 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் மற்றும் நிகழ்வுகள் பற்றிய குறைந்த அறிவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.