தனி நபர் தகவல் திருட்டு விவகாரம்…!!! முகநூல் நிறுவனத்தின் மூக்கை உடைத்த அமெரிக்கா…!!! பல கோடி டாலர் அபராதம் விதிப்பு …!!!

Default Image
உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான முகநுலில்  தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில்  அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஒன்றுகூடி முகநூல் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தனது தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for FACEBOOK
முகநூல் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை  எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. முகநூல் நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.இந்த முறை முகநூல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட இருக்கும் அபராத தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிகிறது.
Image result for FACEBOOK
கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு 2.25 கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் ஐந்து பேர் அடங்கிய விசாரணை குழு முகநூல் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விவரங்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அபராத தொகை பற்றி இன்னும் எந்த முடிவும்  எட்டப்படவில்லை என தெரிகிறது.விசாரனை குழுவினர் சமர்பித்து இருக்கும் விவரங்களை கொண்டு அபராத தொகையை விரைவில் பரிந்துரைக்கலாம் என கூறப்படுகிறது.
Related image
இதுதவிர அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் விசாரணை பற்றிய பேச்சுவார்த்தைகளில் முகநூல் ஈடுபட்டதாக தெரிகிறது.எனினும் அபாரதம் விதிக்கப்படும் பட்சத்தில் வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையை முகநூல் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.எனினும் தனிநபர் தகவல் திருட்டு என்பது  ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும்.எனவே இனிவரும் காலங்களில் தனிநபர் திருட்டு என்பது இல்லாத நிலை உருவாகவேண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.
DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்