சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.
பிரபல சமூக ஊடக பயன்பாடுகளான மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக டவுன்டெக்டர் என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் இந்த சிக்கல் இருந்து வருகிறது, மெட்டாவின் பிரதான மையத்தில் சர்வர் தொடர்பான பிரச்சனைகள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக வளைத்தளத்தில் கூறப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு சமூக வலைத்தளங்களும் முடங்கியதாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக டவுன்டெக்டர் கூறியுள்ளது. இதில், 59% பேர் இன்ஸ்டாகிராமை உபயோகிக்க சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 34% பேர் சர்வர் சிக்கல்களை சந்தித்ததாகவும். மேலும், 7% பேர் உள்நுழைவதில் சிக்கல்களையும் எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனம் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து வெளியேறுவதாக புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…