உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்!

facebook instagram

சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.

பிரபல சமூக ஊடக பயன்பாடுகளான மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக டவுன்டெக்டர் என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.

காலை 7 மணி முதல் இந்த சிக்கல் இருந்து வருகிறது, மெட்டாவின் பிரதான மையத்தில் சர்வர் தொடர்பான பிரச்சனைகள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக வளைத்தளத்தில் கூறப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு சமூக வலைத்தளங்களும் முடங்கியதாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக டவுன்டெக்டர் கூறியுள்ளது. இதில், 59% பேர் இன்ஸ்டாகிராமை உபயோகிக்க சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 34% பேர் சர்வர் சிக்கல்களை சந்தித்ததாகவும். மேலும், 7% பேர் உள்நுழைவதில் சிக்கல்களையும் எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனம் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து வெளியேறுவதாக புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்