ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை தாய் நிறுவனமான மெட்டாவில் பெரும் செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் செயலிகள் மற்றும் இணையதளங்களை வழக்கம் போல் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயப்படுத்திக்கொண்டிருந்த பயனர்கள் செயலிகள் தன்னிச்சையாக லோக்அவுட் ஆகியுள்ளது .இதன் பின்னர் பயனர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபொழுது அவர்களால் உள்ளே செல்ல முடியாத நிலையே தற்பொழுதுவரை நீடிக்கிறது
இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . மெட்டா நிறுவனம் இந்த செயலிழப்பு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இருப்பினும், கண்காணிப்பு இணையதளமான டவுன் டிடெக்டர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் பெரும் செயலிழப்பைக் காட்டியுள்ளது.