முகநூலில் கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை முடிந்தளவு முகநூல் நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது. என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய இடத்தில் இருப்பது பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து வருகிறது தான். என்றாலும், இது தற்போது அதிகரித்து வருவதே வேதனைக்குரியது. இப்படிப்பட்ட ஒரு மோசமான சம்பவம் தான் பொள்ளாச்சியிலும் நடந்துள்ளது.
முகநூல் நண்பர்கள்!
சில ஆண்கள் பெண்களை தவறான வழியில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக முகநூலை பயன்படுத்தி, பெண்களிடன் நட்பு அழைப்பு விடுத்து (Friend Request) பிறகு நல்லவர்களை போல நடித்து, ஆசை வார்த்தை காட்டி, தவறான முறையில் அவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். இதையே தான் பொள்ளாச்சியை சேர்ந்த சபரி என்கிற சிவில் எஞ்ஜினியரிங் மாணவவனும் செய்துள்ளான்.
பெண்களிடம் கைவரிசை
கல்லூரி பெண்கள், பணக்கார பெண்கள், மிகவும் அழகான பெண்கள் போன்றோர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சபரி மற்றும் அவரின் 3 நண்பர்கள் ஆபாச முறையில் பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதில் சுமார் 200 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு சிக்கினர்?
பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவியுடன் முகநூல் நண்பராகி அதன் பின்னர் அவரை நேரில் பார்க்க சபரி அழைத்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காக காத்திருக்குமாறு கூறியுள்ளான். அப்போது திடீரென்று காரில் தனது நண்பர்களுடன் வந்து, அப்பெண்ணை பலவந்தமாக வற்புறுத்தி ஆபாசமான முறையில் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
பாலியல் தொல்லை
இந்த ஆபாச புகைப்படங்களை வைத்து அந்த மாணவியிடம் ஆரம்பத்தில் பணத்தை மிரட்டி வாங்கி வந்த நிலையில், அதன் பின் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதை தாங்கி கொள்ள முடியாத மாணவி காவல்துறையினரை நாடியுள்ளார்.
கைது
இதன் பின் சபரி மற்றும் அவருடன் இருந்த 3 நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. கைது செய்து இவர்களின் மொபைலை ஆய்வு செய்ததில் 200 பெண்களின் ஆபாச புகைப்படங்கள் சிக்கியது. கைது செய்யப்பட்டவரில் ஒருவர் அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் இதை மூடிமறைக்க பார்ப்பதாக பொள்ளாச்சி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முகநூல்!
தொழிற்நுட்பம் என்பது பேனா முனையை போன்றது. இதை நாம் எழுதவும் பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது ஒருவரை கொல்லவும் பயன்படுத்தலாம். ஆதலால், இனி முகநூல் போன்றவற்றை பயன்படுத்துவோர் இதை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்லது. பெண்களும், பழகும் ஆண்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணராமல் நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…