உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியானது.
திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து அவர்களது ஈடுபாடுகளை தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய பொய்யான செய்திகளை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர், அங்கு நடந்த சட்டவிரோத செயல்களை, பிரிட்டனின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டார். பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்ட செய்தி தெரிந்தவுடன், பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சுமார் 7% சரிவை சந்தித்தது.
இதனால், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டது. பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு இதனால், சுமார் ரூ.39,000 கோடி சரிந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…