டிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

Default Image

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில்  பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.

Image result for டிக்டாக் ஃபேஸ்புக்

இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக ட்விட்டர் நிறுவனத்தில் வீடியோ தளத்தில் வேலை செய்து வந்த ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Image result for டிக்டாக் ஃபேஸ்புக்

கடந்த வாரம் ஃ பேஸ்புக் நிறுவனம் புதிய செயலிக்கான சோதனை குழு ஒன்றை நியமனம் செய்தது.இந்த சோதனை குழு புதிய செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் என கூறியது.இந்நிலையில் தற்போது ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டதால்  டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்