பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க சட்டவல்லுநர்களை சந்திக்கிறார்..!!
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் பேஸ்புக் தகவல்களை பகிர்ந்துகொண்டதுக்கான விசாரணையில் ஆஜர் ஆவதற்கு ஒரு நாள் முன்னதாக அமெரிக்க சட்டவல்லுநர்களை சந்தித்தார்.
மார்க் ஜூக்கர்பெர்க் தான் ஆஜராகும் கமிட்டியில் உள்ள சில சட்டவல்லுநர்களையும் சந்திக்க உள்ளார் எனவும், ஆனால் இது பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
யூ.எஸ் செனன்ட் ஜூடிசியரி மற்றும் காமர்ஸ் கமிட்டியின் கூட்டு விசாரணையில் செவ்வாய்கிழமையும், யூ.எஸ் ஹவுஸ் எனர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டி முன்பு புதன்கிழமையும் ஆஜராக திட்டமிட்டுள்ளார் மார்க். பேஸ்புக் தனது 87மில்லியன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை சட்டவிரோதமாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட பிரச்சனை கடந்த சில வாரங்களாக பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிறு அன்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பயனர்களிடம் திங்கட்கிழமை இத்தகவலை தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், 2016 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவாக , அவரது பிரச்சாரத்தை குறிப்பிட்ட அளவு பேஸ்புக் பயனாளர்களிடம் பகிர்ந்துள்ளது. மார்க் இந்த விசாரணையில் தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, எவ்வளவு பயனர்கள் பாதிக்கப்பட்டார்கள், எங்கு தவறு நடந்தது என்பதற்கான சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பத்திரியாளர்களை சந்தித்த மார்க், பேஸ்புக் தகவல்கள் கசிந்ததை ஒப்புக்கொண்டது பயனர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் சட்டவல்லுநர்களை கோபப்படுத்தியது. அதே நேரம், இவர் தான் நிறுவனத்தை தலைமையேற்க சரியான ஆள் என கூறினர்.
ரஷ்யாவும் சமூகவலைதள தகவல்களை பெற்று தேர்தலில் தலையிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள் என்ற மார்க் சக்கர்பெர்க்கின் கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.
பிப்ரவரியில் ராபர்ட் முல்லரின் அமெரிக்க சிறப்பு கவுன்சில் , 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூகவலைதளங்கள் மூலம் தலையிட்டதாக 13 ரஷ்யர்கள் மற்றும் 3 ரஷ்ய நிறுவனங்களின் குற்றம் சுமத்தியுள்ளது. Instagram Simple Tips and Tricks (TAMIL) பத்திரிக்கையாளர்களிடம் மேலும் பேசிய மார்க், பேஸ்புக் நிறுவனம் இன்னும் நிறைய தணிக்கைகளையும், 2014 ல்கேம்பிரிட்ஜ் நிறுவனத்திலிருந்து பணியமர்த்திய ஒருவரை போன்ற, அனைத்து மூன்றாம் தரப்பு செயலி வடிவமைப்பாளர்களையும் மேற்பார்வையிட வேண்டும் எனவும் கூறினார்.