பேஸ்புக் பக்கம் முடக்கம்!பேஸ்புக் மூலம் தாக்குதல் ..
பேஸ்புக் நிறுவனம் இந்து மதத்தில் இருந்து மாறி திருமணம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூறி, பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட பக்கத்தை, முடக்கியுள்ளது. ஹிந்துத்வா வர்தா என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து மாறி, மாற்று மதத்தவரை திருமணம் செய்தவர்கள் என்று கூறப்பட்டதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆண் மற்றும் பெண்களின் பேஸ்புக் பக்கத்தின் இணைப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பினர் புகார் கூறியதை அடுத்து, அந்த பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. மேலும், வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற வேறு சில பக்கங்களையும் நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கைகள் குவிந்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.