புதிய களத்தில் இறங்கும் ஃபேஸ்புக் ! ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி அதிரடி …
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது ஃபேஸ்புக்.இந்த ஃபேஸ்புக் தலைமை அதிகாரி தற்போது புதிய முயற்சியால் களம் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப செய்தி பத்திரிக்கை ஒன்றுக்குப் பேட்டியளித்த ஃபேஸ்புக்கின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஜூக்கெர்பெர்க் (Mark Zuckerberg), தாமும் தமது மனைவியும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, மக்களுடன் உரையாடி அவர்களின் விருப்பம் அறிந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
அப்போது, தனி நபர் பகிரும் பதிவை விட, உள்ளூரில், தாம் சார்ந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற தகவலை அளிக்கும் செய்திகளை பயனாளர்கள் அதிகம் விரும்புவது தெரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நியூஸ்ஃபீடில் வரும் செய்திகளில் பயனாளர்கள் அதிகம் கிளிக் செய்து உள்நுழைந்து பார்ப்பது உள்ளூர் செய்திகள்தான் என மென்லோ பார்க் எனும் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
எனவே, ஒரு செய்தி வழங்கும் நிறுவனத்தை பின் தொடரும் நபரோ, அல்லது அதைப் பின் தொடரும் நண்பர் அதைப் பகிர்ந்திருந்தாலோ, அதற்கு முன்னுரிமை அளித்து அச்செய்தியை முதலாவதாகக் காட்சிப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.