FACEBOOK பயன்பாட்டாளர்களின் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படுகிறதா?பரிமாறாமல் இருக்க இதோ வழி….
பயனாளர், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படுவதாகக் கூறி, உலகம் முழுவதும் டெலிட் ஃபேஸ்புக் எனும் பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், கண்காணிக்கப்படுவதில் இருந்து தப்பவும் வாய்ப்பு உள்ளது.
ஃபேஸ்புக்கை வைத்துள்ள கணினி அல்லது மொபைலில் நாம் தேடுவது, நமக்குப் பிடித்தது, நாம் செலவிடுவது உள்ளிட்டவை கண்காணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தகைய வாய்ப்புக்களை நாம் பயன்படுத்தும் சில ஆப்களுக்கு ஃபேஸ்புக் வழங்காமலிருக்க ஃபேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட் செட்டிங்க்சில் தேவையான மாற்றங்கள் செய்யலாம்.
ஆப்ஸ் (Apps) என்ற ஆப்சன் மூலம் நம்மை ஃபேஸ்புக் மூலம் மறைமுகமாகப் பின்தொடரும் ஆப்களின் பட்டியலைக் கண்டறிந்து அவற்றை அடுத்துள்ள பெருக்கல் குறியை கிளிக் செய்ய வேண்டும். அதையடுத்து எழும் பாப் அப்பில் அந்த ஆப்- டெவலபரைத் தொடர்புகொண்டு அதற்கு வழங்கப்பட்டுள்ள கண்காணிப்பு அனுமதியை நீக்கிக் கொள்ள முடியும்.
அதற்கு Facebook Account settings > Apps> ‘X’ mark > Remove
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.