அறிமுகத்திற்கு முன்பே கசிந்த அட்டகாசமான அம்சங்கள்.! எந்த ஸ்மார்ட்போன் மாடல் தெரியுமா.?

GooglePixel8

கடந்த சில வாரங்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் தரப்பிலிருந்து அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் வேலையில், இதற்கான விளம்பர வீடியோ ஒன்று கூகுள் தரப்பிலிருந்து கடந்த செப்-7ம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

அதில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் அக்-4ம் தேதி என திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிமுகத்திற்கு முன்னதாக கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பான அம்சங்களுடன் வருகின்றன.

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 8 ஆனது 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடைய 6.2 இன்ச் அளவுள்ள எப்எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2,000 நிட்ஸ் வரையிலான உச்சகட்ட பிரைட்னெஸ்ஸை வழங்குகிறது. இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் ஐபி68 ரேட்டிங் உள்ளது.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஆனது 6.7 இன்ச் அளவுள்ள எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதேபோல, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,400 நிட்ஸ் வரை உச்சகட்ட பிரைட்னெஸ்ஸை வழங்குகிறது. இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மற்றும் ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

பிராசஸர்:

கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. கூடவே டைட்டன் எம்2 பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டென்சர் ஜி3 சிப் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 அளவிற்கு பெர்பார்மன்ஸ் தரவில்லை என்றாலும் கூட, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் அளவிற்கு இருக்கக்கூடும்.

ஆன்ட்ராய்டு 14 மூலம் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் தரப்படும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேமரா: 

கூகுள் பிக்சல் 8 கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் 50 எம்பி ஆக்டா பிடி வைட் அங்கிள் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. கேமராவில் OIS மற்றும் EIS போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன. அதோடு, முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது.

பிக்சல் 8 ப்ரோ மாடலில் பின்புறம் 50எம்பி ஆக்டா பிடி கேமரா 48எம்பி குவாட் பிடி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 30x வரையிலான சூப்பர் ரெஸ் ஜூம் திறன் கொண்ட 48எம்பி குவாட் பிடி டெலிஃபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு, முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது.

பேட்டரி:

கூகுள் பிக்சல் 8 மாடலில் 4,575 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை விரைவில் சார்ஜ் செய்ய 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 18 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5,050 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை விரைவில் சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

அப்சிடியன், ஹேசல் மற்றும் ரோஸ் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும் பிக்சல் 8 ஆனது 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன.

மேலும், பிக்சல் 8 ப்ரோ ஆனது 12 ஜிபி ரேம் + 516 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிக்சல் 8 மாடல் 699 டாலர் (ரூ. 51,800) என்ற விலையிலும், பிக்சல் 8 ப்ரோ மாடல் 899 டாலர் (ரூ.74,800) என்ற விலையிலும் விற்பனைக்கு வரலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்