யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
பின், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது தொடர்பாக சான் ப்ரூனோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, “இது வார்த்தைகளால் கூறிவிட முடியாத அளவிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது. நம் அரசு பாதுகாப்புப்படை வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். வன்முறை சம்பவத்தால் ஒருவர் இறந்திருக்கிறார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். நீங்கள் இன்னமும் அதிர்ச்சியில் மீண்டிருக்கமாட்டீர்கள். கூகுள் குடும்பமான அனைவரும் இந்த மோசமான சம்பவத்திலிருந்து மீண்டு வர முயற்சிப்போம்”. என்று கூறியுள்ளார்
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…