எலான் மஸ்க்கின் Grok AI.! இப்போது இந்தியாவிலும் அறிமுகம்.!

Grok AI

சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸில் இருக்கும் எக்ஸின் மெனுவில் இந்த க்ரோக் ஏஐ சாட்போட்டை காணலாம்.

AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?

முன்னதாக அமெரிக்காவில் உள்ள பிரீமியம்+ சந்தாதாரர்களுக்கு க்ரோக் ஏஐ அம்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சாட்போட் கிடைக்கிறது. இது X.AI ஆல் உருவாக்கப்பட்ட Grok-1 எனப்படும் AI மாடலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது.

எனவே கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி போன்ற மிகவும் பிரபலமான சாட்போட்களுடன் ஒப்பிடும்போது க்ரோக் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. மற்ற சாட்போட்கள் பதிலளிக்கத்தவரும் கேள்விகளுக்கு இந்த க்ரோக் பதிலளிக்கும் என்று கூறப்படுகிறது. இது எக்ஸில் இருந்து நிகழ்நேர தகவல்களைப் பெற்று அதிலிருந்து பதிலளிக்கிறது.

மின்னல் வேகத்தில் AI தொழில்நுட்பம்… இலவசமாய் கற்றுக்கொள்ள 6 இணையவழி படிப்புகள்.!

ஆனால் இதற்கு நேர்மாறாக கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி ஆகியவை இணையத்தில் உள்ள தகவல்கள், புத்தகங்கள் மற்றும் விக்கிபீடியா போன்றவற்றிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து நமக்குத் தருகிறது. மேலும், இந்தியாவில் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு மாதம் ரூ. 1,300 செலவாகும். அதுவே வருடத்திற்கு ரூ.13,600 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்