எலான் மஸ்கின் இரண்டாவது ட்விட்டர் கணக்கு..! ரகசியத்தை வெளிப்படுத்திய ஸ்கிரீன்ஷாட்..!

Default Image

எலோன் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக பணக்காரர்களை ஒருவரும், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (திங்கள் கிழமை) எலான் மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கில் தனது சுயவிவரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளார்.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில் அவரது சுயவிவர புகைப்படத்திற்கு மேல் வலதுபுறத்தில் அவர் இரண்டாவது கணக்கு வைத்திருப்பதைக் காட்டியது. அந்த கணக்கு அவரது 2 வயது மகனின் புகைப்படத்துடன் உள்ளது. எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய சில வாரங்களில் இந்த கணக்கை உருவாக்கியுள்ளார்.

மேலும், @ErmnMusk என்ற பயனர் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த கணக்கில் முதல் பதிவாக ‘இது என்னுடைய முதல் ட்வீட்’ என்றும் இறுதி பதிவில் ‘நான் இறுதியாக மே 4 அன்று 3 வயதை அடைவேன்’ எனவும் பதிவிட்டுள்ளது. இந்த கணக்கை 21 ஆயிரம் பயனர்கள் பின்தொடர்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்