தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்து ஆப்பிளை கலாய்த்த எலான் மஸ்க்!

Published by
அகில் R

எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார்.

மேலும், டெஸ்லா நிறுவனத்தின் அதிபரான இவர் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வந்த நிலையில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதை தொடர்ந்து தனது நிறுவனத்துடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களை வம்புக்கிழுப்பதை வழக்கமாகவே கொண்டவர் தான் எலான் மஸ்க். சமூக வலைதளங்களில் தன்னை எப்போதுமே ஆக்டிவாக வைத்து கொள்ளும் இவர் தினமும் X-இல் ஒரு பதிவுகள் பதிவிட்டு கொண்டே வருபவர் ஆவார்.

இந்நிலையில், தற்போது இரு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் – ஓபன் ஏஐ நிறுவனங்களை அவர் தற்போது சீண்டி இருக்கிறார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் (CEO Tim Cook) தனது X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், ரீட்வீட் செய்துள்ள எலான் மஸ்க் ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் (Open AI) பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடைவிதிப்பதாக” தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனது X பக்கத்தில் தமிழ் மீம் (Meme) ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தப்பாட்டம் படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டர் தான் அது. தற்போது, இந்த மீமை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தை கலாய்த்து இருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இந்த சம்பவமானது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

2 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

5 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

5 hours ago

கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம்…

6 hours ago

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

6 hours ago