இனி டிவிட்டரில் முழு நீள படத்தையே பார்த்துவிடலாம்.! எலான் மஸ்க் கொடுத்த மாஸ் அப்டேட்…
டிவிட்டரில் 2மணி நேரம் வரையில் ஓட கூடிய வீடியோவை பதிவிடலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிரபலங்களுக்கு இலவச ப்ளூ டிக் என்பதை நீக்கி கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் என கொண்டு வந்தார்.
அதன் பிறகு ஆடியோ கால், வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்த எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . அதாவது அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கும் ப்ளூ டிக் கணக்காளர்கள் 2 மணிநேரம் வரையில் ஓட கூடிய வீடியோ பதிவை , 8ஜிபி வரை அளவு வரையில் அனைவரும் பார்க்கு வகையில் பதிவேற்றி கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கான அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது.
இதனை பார்த்த டிவிட்டர்வாசிகள், இனிமேல் முழு நீள படத்தை இதில் பதிவேற்றலாம். அதே போல திரைப்படத்தை இதில் பார்த்துக்கொள்ளவும் செய்யலாம் என கூறி வருகின்றனர்.