இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..!
சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும்.
இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. இதை இன்ஸ்டாவில் மிக சுலபமாக செய்ய சில வழிகள் உள்ளன. அவற்றை இனி அறிந்து கொள்ளலாம்.
குறிக்கோள்
எந்த ஒரு சமூக வலைத்தளமாக இருந்தாலும் அதில் நாம் செய்ய கூடிய விஷயங்களை பற்றிய தெளிவான குறிப்பு இருக்க வேண்டும். எவ்வளவு ஃபாலோவர்களை நாம் ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்க வேண்டும்.
பிரபலமானவை
பொதுவாக இன்ஸ்டாவில் அதிக அளவில் பார்க்கப்படுவதும் பின்பற்றவடுதும் மிக சில. குறிப்பாக வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்கள், சமையல், புத்தகம் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் பிரபலமாகும் என இன்ஸ்டா நிறுவனமே தெரிவித்துள்ளது. மேலும், பதிவிடும் கருத்துக்கள் மிக தெளிவாக இருந்தால் மேலும் அதிக ஃபாலோவர்கள் உங்களை தேடி வருவார்கள்.
ட்ரெண்ட் முக்கியம்
இன்ஸ்டாவில் அதிக அளவில் நீங்கள் பிரபமாக வேண்டுமென்றால் எப்போதும் ட்ரெண்டான பதிவுகளை பதிவிட வேண்டும். இது உங்களுக்கு அதிக ஃபாலோவர்களை பெற்று தரும் ட்ரிக்..! உதாரணத்துக்கு சமீபத்தில் ட்ரெண்டாகிய “10-year challenge” போல பதிவிட்டால் எளிதில் அதிக ஃபாலோவர்ஸ் உங்களுக்கு கிடைப்பார்கள்.
கேப்ஷன்ஸ்
நாம் பதிவிடும் பதிவுகளில் சிறந்த தகவல்களை பதிவிடுவது மட்டும் முக்கியம் இல்லை. அதோடு சேர்த்து சில முக்கியமான பிரபலமான கேப்ஷன்களையும் நாம் பதிவிட வேண்டும். இது உங்களது பதிவை அதிக அளவில் கவரும்.
தொடர்பு
எப்போதுமே உங்களிடம் ஃபாலோவர்ஸ்களுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும். இதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் அதிக பிணைப்பை உண்டாக்கும். மேலும், பதிவில் குறிப்பிடும் ஹேஷ் டேக்ஸ் மிக முக்கியமானது. இதை எப்போதுமே மறந்து விடாதீர்.
தனித்துவம்
உங்களது எல்லாவித பதிவுகளையும் ஒரே அக்கௌண்டில் போட்டு விடாதீர்கள். இது குப்பை போன்று தோன்றும். ஆதலால், உங்களின் தனி திறன்களை எப்போதுமே தனி தனியாக ஒரு அக்கௌன்ட் வைத்து கொண்டு பதிவிட்டு, சிறப்பாக செயல்படுங்கள்.
இந்த 6 வழிகளையும் பின்பற்றினால் அதிக அளவில் ஃபாலோவர்ஸ்களை பெற்று, மிக விரைவில் நீங்களும் பிரபலமாக மாறி விடலாம்.