இனிமேல் கவலையில்லை..! அழிந்த தகவல்களை மீட்டெடுக்கலாம்..! முழு விவரம் இதோ..

Recover lost files

உங்களது சாதனங்களில் இருந்து அழிந்த தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நிறுவனம் சம்பந்தமான ஆவணங்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் தங்களது முக்கியமான தகவல்களை லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கிறோம். அத்தகைய தகவல்கள் தற்செயலாக அழிந்துவிட்டால் அதனை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இவ்வாறு தவறுதலாக அழிந்த தகவல்களை பல வழிகளில் எளிதாக மீட்டெடுக்க முடியும். அவற்றில் சிலவற்றை இப்போது காணலாம்.

மறுசுழற்சி தொட்டி (Recycle Bin): 

முதலில் நீங்கள் எந்த முறையில் தகவல்களை அழித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் டெலீட் (Delete) மட்டும் கிளிக் செய்து அழித்தீர்கள் என்றால் நீக்கப்பட்ட தகவல்கள் உங்களது லேப்டாப்பில் இருக்கும் மறுசுழற்சி தொட்டிக்குள் (Recycle Bin) இருக்கும். அந்த கோப்பு அல்லது தகவலை ரைட் கிளிக் செய்து ரிஸ்டார் (Restore) என்பதை கிளிக் செய்வதன் மூலம், அந்த தகவல் முன்னதாக இருந்த இடத்திற்கு சென்றுவிடும்.

பேக்கப் (Backup):

நீங்கள் டெலிட் மட்டும் கிளிக் செய்வதற்கு பதிலாக ஹிப்ட்+டெலிட் என்பதை கிளிக் செய்து அளித்தீர்கள் என்றால் அந்த தகவல்கள் உங்களது மறுசுழற்சி பெட்டியில் கூட இருக்காது. அவ்வாறு இருக்கும் சூழலில் உங்கள் லேப்டாப்பில் இருக்கும் பேக்கப் (Backup) அம்சத்தை பயன்படுத்தி அந்த தகவல்களை மீண்டும் எடுத்துக் கொள்ள முடியும்.

அதற்கு, நீங்கள் விண்டோஸ் பட்டனைக் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் வரும் சிஸ்டம் அண்ட் மெயின்டெனன்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து, பேக்கப் அண்ட் ரெஸ்டோர் என்பதை கிளிக் செய்து அழிந்த தகவல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதற்கு உங்களது மைக்ரோசாப்ட் ஐடி, லேப்டாப் உடன் இணைத்திருக்க வேண்டும்.

பேக்கப் சாஃப்ட்வேர் (Backup Software):

நீங்கள் அழித்த தகவல்கள் உங்களது மறுசுழற்சியை பெட்டியிலும் இல்லாமல் பேக்கப்பிலும் இல்லாமல் இருந்தால் இணையதளங்களில் இருக்கும் தகவல்களை மீட்டெடுக்கும் சாஃப்ட்வேர்களை (Backup Software) பயன்படுத்தலாம். குறிப்பாக, ரெகியூவா (Recuva), டேட்டா ரெக்கவர் (Data Recover) அல்லது டிஸ்க்ட்ரில் (Disk Drill) போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்