சூப்பர் சான்ஸ்: பிளாக் ஃப்ரைடே விற்பனையில் PS5… மிஸ் பண்ணிடாதீங்க!

அமேசானில் வரவிருக்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனையைத் தவிர, நவம்பர் சேமிப்பு விற்பனையும் தற்போது நடந்து வருகிறது.

ps5 black friday sale

டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக அறிவித்தது. இதனால் பல்வேறு தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஆண்டு, பிளாக் ஃப்ரைடே விற்பனை நவம்பர் 22 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 2 அன்று வரை நடைபெறுகிறது.

ஆனால், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உட்பட விற்பனையின் சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அந்த விபரங்கள் விற்பனைக்கு முந்தைய நாள் வெளியிடப்படும். அமேசானில் வரவிருக்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனையைத் தவிர, நவம்பர் சேமிப்பு விற்பனையும் தற்போது நடந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் சோனி, உலகளவில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் (Play Station) கேம்களுக்கு உலகளவில் வரவேற்பு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் கேம்கள் சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை விரும்பும் ஒன்றாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே சோனி PS பிளஸ் பிளாக் பிரைடேயுடன் வருவதைப் பற்றிய வதந்திகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. PS5 மற்றும் PS4 பயனர்களுக்கு Sony சிறந்த PS Plus கேம்களை தள்ளுபடியில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, PS4 மற்றும் PS5 பயனர்கள் இதுவரை PS Plusக்கு சந்தா செலுத்தாதவர்கள் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் சந்தாவைப் பெறலாம். இந்த விற்பனை நாளை மறுநாள் (நவம்பர் 22 ) முதல்  வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, பிளேஸ்டேஷன் PS பிளஸ் சந்தாக்களில் 25 சதவீதம் அல்லது 30 சதவீதம் தள்ளுபடியை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு கருப்பு வெள்ளி விற்பனையின் போது PS Plus தள்ளுபடி செய்யப்படுமா என்பதை Sony இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin