காந்த ஆற்றல் பூமியில் குறைகிறதா?

Published by
Dinasuvadu desk

தென் அட்லாண்டிக் கடல் பகுதியில், சிலி நாட்டிலிருந்து, ஜிம்பாப்வே வரையிலுள்ள பகுதியில், பூமிக்கு இயற்கையிலேயே உள்ள காந்த விசை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாடு, 1958லேயே கண்டறியப்பட்டதுதான் என்றாலும், இந்த பகுதியின் காந்த விசை, ஆண்டுகள் செல்லச் செல்ல குறைந்த படியேதான் உள்ளது என்பதை, அண்மையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அய்ஸ்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

Image result for Does the Earth's Magnetic Energy Reduced?அப்படியென்றால், பூமிக்கு ஏதாவது பாதிப்புகள் வருமா? முதலில் புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இரு பொருட்களின் எடையை வைத்து, பெரிய பொருள் சிறிய பொருளை ஈர்த்துக்கொண்டே இருக்கும் என்பது, பிரபஞ்ச விதி. இதன்படி பூமி எனும் ராட்சதப் பந்து, அதன் மீதுள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும், தன்னை நோக்கி ஒரே வேகத்தில் ஈர்த்தபடியே உள்ளது. இதுதான் புவியீர்ப்பு விசை.

ஆனால், பூமியின் காந்த விசை, தென், வட புலங்களைக் கொண்டு, பூமியை காக்கிறது. பிர பஞ்சம் வீசும் ஆபத்தான கதிர்கள் உள்ளே வராமல் தடுக்கக்கூடிய கவசமாகவும், திசைகளை உணர்த்தும் புலமாகவும் அது இருக்கிறது. சரி, ஏன் குறிப்பிட்ட இடத்தில் அந்த விசை குறைவாக இருக்கிறது? இதற்கு மூன்று நாட்டு விஞ்ஞானிகளும் சொல்லும் விளக்கம், பூமியின் வட, தென் துருவ காந்தப் புலம் இரண்டு அல்லது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி துருவங்கள் திருப்பிப்போடப்படுவது நடக்கிறது.

அதன்படி, கடைசியாக துருவ மாற்றம் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால், தென் அட்லாண்டிக் பகுதியில் புவியின் காந்தம் பலவீனமாக இருப்பதை வைத்து, துருவ மாற்றம் ஏற்படும் என, சொல்லிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

துருவங்கள் மாறும் தருவாயில், பிரபஞ்ச கதிர்வீச்சு அதிகம் பூமியின் வளி மண்டலத்திற்குள் வரலாம் என்றாலும், பலர் அவ நம்பிக்கையாளர்கள் கணிப்பதைப் போல பேரிடர்கள் ஏதும் நிகழாது. அதிகபட்சமாக, நாம் பழைய திசைமானிகளை விட்டுவிட்டு, புதிய திசைமானிகளை வாங்கவேண்டியிருக்கும் என்கின்றனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

‘மீண்டும் ஜீன்ஸுடன் களமிறங்கிய கார்ல்சன்’… வரலாற்றில் முதல் முறையாக 2 பேர் சாம்பியன்!

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…

4 hours ago

புற்றுநோயில் இருந்து மீண்ட ஜெயிலர் பட பிரபலம்… மனைவியோடு உருக்கமாக பதிவு!

சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…

5 hours ago

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

6 hours ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

7 hours ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

7 hours ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

8 hours ago