பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் திரைப்படம் புரிந்துகொள்ளலாம்.! எப்படி தெரியுமா.?

blind people watch movies

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, எளிய தகவல்களை அணுகுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பார்வையற்றவர்கள் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) முடியுமா? அப்படியானால், அது எப்படி சாத்தியம்? அதை பற்றி பார்க்கலாம். பார்வையற்றகளில் 89% பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.

அதன் வழியாக அவர்களின் அன்றாட வாழ்வில் உதவுவதற்காக நிறைய செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் திறன்பட செயல்பட அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளும் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) வகையில் புதிய செயலி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்….

ஆடியோ விவரிக்கும் திரைப்படம்  

விளக்கத் திரைப்படங்கள் என்பது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஒரு திரைப்படத்தை பார்வையுள்ளவர்கள் அனுபவிப்பது போல் அனுபவிக்கும் ஒரு வழியாகும். உரையாடல்களுக்கு இடையே நடக்கும் வாய்மொழி விளக்கங்கள், திரையில் என்ன காட்டப்படுகிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இது திரைப்படத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான சூழலை வழங்குகிறது.

ஆடியோ விவரித்த திரைப்படங்கள், பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் காட்சிகளை முழுமையாகப் புரிந்துகொண்டு திரைப்படங்களை ரசிக்க முடியுகிறது. பல திரையரங்குகள் பார்வையற்றவர்களுக்காக ஆடியோ விளக்க ஹெட்செட்களை வழங்குகின்றன. அத்துடன் சில செயலிகள் உதவியுடன் படத்த புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் காட்சிக் கதைசொல்லலின் முழு ஸ்பெக்ட்ரத்தையும் தெரிவிப்பதன் மூலம் படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் பார்வையற்ற பார்வையாளர்கள் காட்சிகளை விவரிக்க மற்றவர்களை நம்பாமல் திரைப்படங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

இதற்கென பிரதேகமாக பல்வேறு செயலிகள் உள்ளது. அதில், உலகளவில் சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையற்றவர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம், “Be My Eyes ” என்கிற செயலியைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்படும்போது காட்சி விளக்கத்தைப் பெறுகின்றனர். அதாவது வெறும் காட்சிகளாக பிண்ணணி இசையோட நகரும் காட்சிகளும் இனி வசனங்களால் அவர்களுக்கு வசப்படும்.

இவ்வாறான ஒரு செயலியை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல திரையரங்கில் ஒன்றில் இதே போல் செயலியை பயன்படுத்தி இந்தியன் 2 திரைப்படத்தை பார்வையற்றவர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்